- துவரம்பருப்பு -1கப்
- முருங்கைகாய் -1
- கேரட் -1
- கத்தரிக்காய் -1
- பீன்ஸ்-4
- தக்காளி -1
- சின்னவெங்காயம் -5
- சாம்பார்பொடி -2ஸ்பூன்
- மஞ்சள்பொடி -1/2ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
- புளி -நெல்லிக்காய் அளவு
- தாளிக்க:
- எண்ணை -2ஸ்பூன்
- கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு -1ஸ்பூன்
- பெரிய வெங்காயம் -பாதியளவு
- காய்ந்தமிளகாய் -2
- கறிவேப்பிலை -சிறிது
- பெருங்காயம் -1/2ஸ்பூன்
- கொத்தமல்லிதழை -சிறிது
- பருப்பை குக்கரில் தேவையான தண்ணிர் ஊற்றி வேகவைக்கவும்.
- காய்களை சிறிதாக நறுக்கவும்.
- சின்னவெங்காயத்தை தோல் உரித்துவைக்கவும்.தக்காளி நறுக்கிவைக்கவும்.புளியை ஊறவைத்து கரைத்துவைக்கவும்.
- குழம்புவைக்கும் பாத்திரத்தில் வெந்த பருப்பை போட்டு,நறுக்கிய காய்கள்,சின்னவெங்காயம்,தக்காளி போட்டு சாம்பார்பொடி,மஞ்சள்பொடி போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
- காய்கள் பாதி வெந்தவுடன் கரைத்துவைத்திருக்கும் புளியை ஊற்றி தேவையான உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
- வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு பருப்புகளை போட்டு நறுக்கிய வெங்காயம்,இரண்டாக கிள்ளிய மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளித்து,பெருங்காயம் போட்டு கொதிக்கும் குழம்பில் கொட்டி கொத்தமல்லிதூவி இறக்கவும்.
- கமகம சாம்பார் ரெடி.
அருமையா இருக்கு தோழர் சக்திவேல் - நன்றி
ReplyDelete