- புளி - 2 எழுமிச்சம் பழ அளவு,
- துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் - 1/2 மூடி,
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,,
- உளுந்து அப்பளம் - 1,
- பெருங்காயம் - சிறிது,
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
- பூண்டு - 5 பல்,
- வெல்லம் - சிறிது,
- கறிவேப்பிலை - சிறிது,
- கடுகு - 1/2 டீஸ்பூன்,
- உப்பு - தேவையான அளவு,
- எண்ணெய் - 1 ஸ்பூன்,
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்,
- மணத்தக்காளி வத்தல் - 1 கைப்பிடி.
- புளியை 2 டம்ளரில் ஊற வைத்து, கரைத்து வடி கட்டவும்.
- வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, துவரம்பருப்பு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- துவரம்பருப்பு சிவந்தவுடன், அப்பளத்தை பொடியாக ஒடித்து போடவும்.
- அப்பளம் பொரிந்தவுடன், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிய பின், புளி கரைசலை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
- தேங்காயை நைசாக அரைக்கவும்.
- வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, வத்தல் சேர்த்து, பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து, தேங்காய் வாசம் வரும் வரை வதக்கவும்.
- வதங்கிய பின், கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலில் கொட்டி, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.
- குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்து எடுக்கவும்.